மேலும் செய்திகள்
கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
09-Jun-2025
ஓசூர், ஓசூர், ஹட்கோ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்.ஐ., செல்வராஜ் மற்றும் போலீசார், பஸ்தி இந்திரா நகர் அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியில் சோதனை செய்தபோது, அனுமதி சீட்டு இல்லாமல், ஆவலப்பள்ளியில் இருந்து பஸ்திக்கு, 2 யூனிட் மண்ணை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.* கிருஷ்ணகிரி-யில், திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், மத்துார் அடுத்த, கொடமாண்டப்பட்டி பிரிவு சாலையில் அனுமதியின்றி, 2 யூனிட் ஜல்லி ஏற்றிச்சென்ற டிம்பர் லாரியை, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா பறிமுதல் செய்து, மத்துார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் டிம்பர் லாரி ஓனர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.
09-Jun-2025