மேலும் செய்திகள்
மெட்ரோ ரயில் நிலையங்களில் ஓவியங்கள் வரைய திட்டம்
19-Nov-2024
2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள்கிருஷ்ணகிரி அருகே கண்டுபிடிப்புகிருஷ்ணகிரி, நவ. 22-கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே அங்கனாமலை பகுதியில், பாறை ஓவியங்கள் இருப்பதாக, மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவுக்கு, டாக்டர் லோகேஷ் மற்றும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார், ஓய்வுபெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து ஓய்வு காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கடந்த முறை இங்கு ஆய்வு செய்ததில், 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது அதன் அருகே பனமரத்து பந்தா என்ற இடத்திலுள்ள பெரிய பாறையில், மூன்று இடங்களில் வெண்சாந்து பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஒன்றில் குறியீடுகளும், இரண்டாவதில், 4 மனித உருவங்களும், மூன்றாவதில், மனிதர்கள் நடனமாடும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. பாறையின் அடிப்பாகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கறுப்பு, சிவப்பு பானை ஓடுகளும், இறந்தவர்களை வணங்குவதற்காக, அகல் விளக்கையும் செதுக்கி வைத்துள்ளனர். எனவே இந்த இடம் இறந்தவர்களின் நினைவிடமாகவும், தொடர்ந்து வழிபட பாறையில் விளக்கை செதுக்கி உள்ளனர் என்றும் தெரிகிறது. இவ்வாறு கூறினார்.
19-Nov-2024