கி.கிரி அரசு கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் நேற்று, 21வது பட்டமளிப்பு விழா நடந்தது கல்லுாரி முதல்வர் அனுராதா வரவேற்று, பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு கல்லுாரி கல்வி இணை இயக்குனர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) சிந்தியா செல்வி, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி, அவ்வையார், பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டியும், மாணவர்கள் பெறும் பட்டங்கள் மூலம், முழுமையான குறிக்கோள் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என, பேசினார். 2023-24ம் ஆண்டில் முதுகலை பொருளியல் துறையை சேர்ந்த மாணவர் மணிவண்ணன், பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்று முதலிடம் பிடித்தார். ஜெகன், 2வது இடமும், விக்னேஷ் 3வது இடத்தையும் பெற்றனர். அதேபோல, வரலாற்று துறை முதுகலை மாணவி அஸ்வினி, 10வது இடம் பெற்றார். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில், 2021-24 மற்றும் 2022-24ல் (இளநிலை மற்றும் முதுநிலை கல்வி ஆண்டு) பயின்ற மாணவ, மாணவியர் என மொத்தம், 710 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. ஆங்கில துணைத்தலைவர் சரிதா, அனைத்துத் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரவி, வெங்கடேசன், பாலாஜி, வெங்கடாசலம் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.