மேலும் செய்திகள்
வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி
11-May-2025
ஓசூர், ஓசூர், உட்கோட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, 24 மணி நேரமும் செயல்பட கூடிய வகையில், ஒரு மொபைல் எண்ணை, ஏ.எஸ்.பி., நேற்று அறிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி கூட்ரோட்டில், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஓசூர், அந்திவாடி பகுதிகளில் இருந்து வரும், 4 சாலைகள் சந்திக்கின்றன. இங்கு அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிப்பதால், மத்திகிரி போலீசார், 4 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி, ஸ்டேஷனில் இருந்தவாறு போக்குவரத்தை சீரமைக்கும் பணியை நேற்று துவங்கினர். அதேபோல், மத்திகிரி பஸ் ஸ்டாண்டிலும், 4 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பயன்பாட்டை நேற்று துவக்கி வைத்த, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில், ஸ்டேஷனிலுள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.அதேபோல், ஓசூர் உட்கோட்டத்தில், மிரட்டல், ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி, புகையிலை பொருட்கள், மதுபானம் விற்பனை, பாலியல் சீண்டல் போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும், 24 மணி நேரமும், பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, 96002 35674 என்ற எண்ணை, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் நேற்று அறிவித்தார். இந்த எண்ணிற்கு, 'வாட்ஸாப்' அல்லது போன் செய்து புகார் தெரிவிக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட நபரின் விபரங்கள் வெளியே தெரிவிக்கப்படாது எனவும், ஏ.எஸ்.பி., தெரிவித்தார். மத்திகிரி ஸ்டேஷன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு, எஸ்.ஐ., கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.
11-May-2025