48 நிமிடத்தில் 24 கி.மீ., ஸ்பீடு ஸ்கேட்டிங் சாதனை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி ரோஜா நகரை சேர்ந்த லீலாவதி - குமார் தம்ப-தியின் மகள் பவ்யா, 16. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். தனியார் பயிற்சி மையத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரு-கிறார். உலக சாதனை படைக்க விரும்பிய மாணவி பவ்யா, 'இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' தலைமை எடிட்டர் சதாம் உசேன் முன்னிலையில், ஓசூரில் நேற்று, 48 நிமிடங்-களில் தொடர்ந்து, 24 கி.மீ., துாரத்திற்கு, ஸ்பீடு ஸ்கேட்டிங் செய்தார். இதை, 'இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்து, மாணவி பவ்யாவிற்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி-யது.