புனித சூசையப்பர் ஆலய28ம் ஆண்டு தேர்த்திருவிழா
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே உள்ள காத்தான்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின், 28ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 30ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் ஆலயத்தில் கிருஷ்ணகிரி மறைமாவட்ட முதன்மை குரு இருதயநாதன் மற்றும் பங்கு தந்தையர்கள் ஜேசுதாஸ், ஆல்பர்ட், வில்லியம்ஸ், தியாகு, ஜார்ஜ், தேவசகாயம், சூசைராஜ் ஆகியோரின் கூட்டு திருப்பலியும், மறையுரையும் நடந்து வந்தது. நேற்று முன்தினம், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தலத்தில், 28ம் ஆண்டு தேர்பவனி, வாண வேடிக்கையுடன் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில், சூசையப்பர் பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றினர். முன்னதாக சூசைராஜ், மறைமாவட்ட பொருளாளர் சூசையப்பரின் தேர்பவனியை மந்திரித்து துவக்கி வைத்தார்.