உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊருக்குள் புகுந்த 3 யானைகள் வீடுகளில் முடங்கிய மக்கள்

ஊருக்குள் புகுந்த 3 யானைகள் வீடுகளில் முடங்கிய மக்கள்

கிருஷ்ணகிரி :பர்கூர் அருகே ஊருக்குள் புகுந்த, 3 யானைகளால் அச்சத்தில் மக்கள் வீடுகளில் முடங்கினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர, கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அம்மாநில வனப்பகுதிகளிலிருந்து அவ்வப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் யானை கூட்டம் புகுந்து, விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.இந்நிலையில், ஆந்திர மாநிலம், நந்திபேண்டா காப்புக்காட்டிலிருந்து பிரிந்த ஒரு யானைக்கூட்டம், நேரலக்கோட்டை, திருப்பத்துார் மாவட்டம் வழியாக பர்கூர் அடுத்த ஜிகினிக்கொல்லை பகுதிக்குள் புகுந்துள்ளது.இப்பகுதியானது மலையடிவாரத்தில், பல நுாறு ஏக்கரில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள பகுதி. நேற்றிரவு அப்பகுதிக்கு சென்ற விவசாயிகள், 3 யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் வெளியே வரவேண்டாமென தண்டுரா போடப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் தலைமையிலான வனத்துறையினர், அப்பகுதிக்கு சென்று யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை