உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆயுதத்துடன் சுற்றிய 3 பேர் கைது

ஆயுதத்துடன் சுற்றிய 3 பேர் கைது

ஓசூர், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., சங்கர் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு ஓசூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் முன், ஆயுதத்துடன் மூன்று பேர் சுற்றித்திரிந்தனர். பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவர்கள் சுற்றியதால், போலீசார் பிடித்து விசாரித்தனர்.இதில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மில்லத் நகரை சேர்ந்த முகமது அபிதுல்லா கான், 27, கிருஷ்ணகிரி பாரதி நகரை சேர்ந்த சமீர், 25, கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் கண்ணன் நகரை சேர்ந்த அழகிரி, 28, என்பது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி