தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு
தனியார் நிறுவன மேலாளர்வீட்டில் 3 பவுன் நகை திருட்டுஓசூர், டிச. 10-ஓசூர், குருபட்டி அருகே குளோபல் சிட்டி லேஅவுட்டில் வசிப்பவர் வெங்கடேசன், 36. தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். கடந்த, 7ல் வீட்டை பூட்டி விட்டு, சொந்த ஊரான பர்கூர் அருகே கப்பல்வாடியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3 பவுன் நகையை திருடி சென்றனர். நேற்று முன்தினம் காலை திரும்பி வந்த வெங்கடேசன், கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, நகை திருட்டு போனது தெரிந்தது. அவர் புகார் படி, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.