உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண், ஜல்லி கடத்தல் 3 லாரிகள் பறிமுதல்

மண், ஜல்லி கடத்தல் 3 லாரிகள் பறிமுதல்

கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் பாரதி மற்றும் அதிகாரிகள், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மூக்கண்டப்பள்ளி அருகே என, இரு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, இரு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஒரு லாரியில், 5 யூனிட் எம்.சாண்ட், மற்றொரு லாரியில், ஒன்றரை யூனிட் ஜல்லியை, பெங்களூருக்கு கொண்டு செல்வது தெரிந்தது. இரு லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓசூர் டவுன் மற்றும் சிப்காட் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.கெலமங்கலம், 4 ரோடு சந்திப்பு பகுதியில், விழுப்புரம் சுரங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் முத்து தலைமையிலான சிறப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல், உத்தனப்பள்ளியிலிருந்து கெலமங்கலத்திற்கு, 2 யூனிட் கற்களை கொண்டு சென்ற மினி டிப்பர் லாரி பறிமுதல் செய்து, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !