300 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி, எஸ்.டி.பி.ஐ., முன்னாள் நகர பொருளாளர் துபேல் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி ஒன்றியம், அகசிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, பா.ஜ., முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர் அர்ஜூனன், பர்கூர் ஒன்றியம், தொகரப்பள்ளி பஞ்., பில்லகொட்டாயை சேர்ந்த, பா.ஜ., முன்னாள் நெசவாளர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் என மொத்தம், 300க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு, தி.மு.க., மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகர, தி.மு.க., பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.