மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பல்கலையின் 33வது பட்டமளிப்பு விழா
17-Nov-2024
ஓசூர், நவ. 23-ஓசூர், எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், 33வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமையில் நேற்று நடந்தது.இதில், 2022-23ம் கல்வியாண்டில் பயின்ற, 800க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவியருக்கு, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் சன்னியாசி ஏழுமலை பட்டங்களை வழங்கினார். முன்னதாக அவர் பேசுகையில்,'' அதியமான் கல்வி நிறுவனங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வியறிவு வழங்குகிறது. நாட்டின் இன்ஜினியர்கள் இல்லாத போதே நமது முன்னோர்கள், 1,000 ஆண்டுகளை கடந்து நிற்கும் தஞ்சாவூர் பெரிய கோவில், கல்லணை போன்றவற்றை கட்டினர். கடந்த, 15 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்து வருகிறது. உலகிலேயே, 40 சதவீதம் இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா தான்.நாட்டில், 150 கோடி மக்கள் உள்ளனர். ஒரு நாளைக்கு மூன்று வேளை என எடுத்து கொண்டால், 450 கோடி உணவுகள் தயாரிக்க வேண்டும். விவசாயம் சார்ந்த நமது நாட்டில், விவசாய நிலங்கள் சுருங்கி வருகிறது. அதனால், விஞ்ஞான விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும். போதை பொருட்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். நல்ல குடிமகனாக, மாணவனாக இருக்க வேண்டும்,'' என்றார். அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை, கல்வி அறக்கட்டளை உறுப்பினர் லாசியா தம்பிதுரை, அதியமான் கல்லுாரி மேலாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Nov-2024