உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தம்பதியிடம் நகை பறித்த தி.மு.க.,வினர் 4 பேர் கைது

தம்பதியிடம் நகை பறித்த தி.மு.க.,வினர் 4 பேர் கைது

கிருஷ்ணகிரி: தம்பதியிடம் நகை பறித்த, தி.மு.க.,வினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து, 35, நகை வியாபாரி. தன்னிடம் உள்ள நகைகளை வங்கியில் அடமானம் வைப்பதற்காக, மனைவியுடன் ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரிக்கு நேற்று முன்தினம் சென்றார். ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது, இரு பைக்குகளில் வந்த நால்வர், அல்லிமுத்து ஸ்கூட்டர் மீது மோதி அவர் வைத்திருந்த ஒன்பதரை பவுன் நகைகளை பறித்து பறந்தனர்.கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணையில் கிருஷ்ணகிரி, கணபதி நகரை சேர்ந்த மதன், 21; கிட்டம்பட்டி சக்திவேல், 29; பாப்பாரப்பட்டி சந்தோஷ்குமார், 28; அவதானப்பட்டி ராஜ்குமார், 28, என்பது தெரிந்தது. அனைவரும் தி.மு.க., உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ராஜ்குமார் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய பொறுப்பில் உள்ளார். நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை