வெவ்வேறு இடங்களில் சிறுமி உட்பட 4 பேர் மாயம்
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சிறுமி உட்பட, 4 பேர் மாயமாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே மேல் சூடாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 38. இவரது மனைவி சரஸ்வதி, 25. இவர்களுக்கு, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 20ம் தேதி மதியம், 3:00 மணிக்கு, தன் மகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற சரஸ்வதி வீடு திரும்பவில்லை. கணவர் புகார் படி, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. கடந்த, 20ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டை அருகே புருனஹள்ளியை சேர்ந்த நர்சரி பண்ணை நடத்தி வரும் கிரீஷ், 26, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.தளி அருகே சி.கே., அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 44. மதகொண்டப்பள்ளியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 17ம் தேதி காலை, 6:30 மணிக்கு வீட்டிலிருந்து கடைக்கு பைக்கில் புறப்பட்டு சென்றவர், கடையை சென்றடையவில்லை. அவரது மனைவி ரவிகலா, 41, புகார் படி, தளி போலீசார், சீனிவாசனை தேடி வருகின்றனர்.