தி.மு.க.,வில் 50 பேர் ஐக்கியம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய, தி.மு.க., பொறுப்பாளர் சரவணன் தலைமையில், கரடிஅள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த, அ.தி.மு.க., மற்றும் த.வெ.க., நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர், கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்ற எம்.எம்.ஏ., வரும் சட்டசபை தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இதில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.