மேலும் செய்திகள்
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
25-Aug-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, 2வது நாளாக நீர்வரத்து, 517 கன அடியாக நீடிக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையில் திறந்து விடப்படும் நீரின் அளவு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்நிலையில், கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த, 2 நாளாக நீர்வரத்து வினாடிக்கு, 517 கன அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில் நீர்மட்டம், 49.85 அடியாக உள்ளது. அணையில் இருந்து வலது, இடதுபுற கால்வாய்கள், ஊற்றுக்கால்வாய்களில், 179 கன அடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில், 338 கன அடி தண்ணீர் என மொத்தம், 517 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாரூர் ஏரியின் முழு கொள்ளளவான, 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 41 கன அடி தண்ணீர், கால்வாய்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையின் மொத்த கொள்ளளவான, 19.60 அடியில் நீர்மட்டம், 6.63 அடியாக உள்ளது. அதேபோல், சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்கும் நீர்வரத்தின்றி, அணையின் மொத்த கொள்ளளவான 32.80 அடியில் நீர்மட்டம், 5.51 அடியாக உள்ளது.
25-Aug-2025