மேலும் செய்திகள்
கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
10-Aug-2025
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே முகலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 110 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில், 3 வகுப்பறைகள் மட்டுமே இருந்ததால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டனர்.அதனால், பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியை கீதா மற்றும் முன்னாள் பஞ்., தலைவர் மகேஷ் ஆகியோர், 'டீல்' நிறுவனத்திடம் கூடுதல் வகுப்பறைகள் கட்ட கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, 'டீல்' நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 1.02 கோடி ரூபாய் மதிப்பில், 6 வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் 'டீல்' நிறுவன நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர், வகுப்பறைகளை திறந்து வைத்தனர். அத்துடன் மேஜை, நாற்காலிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. 'டீல்' நிறுவன மூத்த பொது மேலாளர்கள் சண்முகம், ரவிசிவப்பா, பொது மேலாளர்கள் மார்க்ஸ்மணி, ஹரிகர சுப்பிரமணியம், பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் செயல் அதிகாரி பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
10-Aug-2025