மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர் மாயம்
14-Jan-2025
ஊத்தங்கரையில் சமூக விழிப்புணர்வு பேரணி
12-Jan-2025
ஓசூர்: ஓசூர் அருகே, தேவீரப்பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 31. இவரது மனைவி மாலதி, 28. இவர்களுக்கு, 8 வயது மகள், மற்றும் 5 வயது மகன் உள்ளனர். அப்ப-குதியிலுள்ள தனியார் பள்ளியில் மகள், 3ம் வகுப்பும், மகன் யூ.கே.ஜி.,யும் படிக்கின்றனர். கடந்த, 23 காலை, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து மகன், மகளுடன் வெளியே சென்ற மாலதி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் ஸ்ரீதர் புகார் படி, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.தேன்கனிக்கோட்டை அருகே, அர்த்தக்கூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரப்பா மகள் சவுந்தர்யா, 21. கடந்த, 23 இரவு, 10:00 மணிக்கு மாயமானார். அவரது தாய் பூலட்சுமி, 40, புகாரில், தேன்கனிக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த நிதின், 23, மீது சந்-தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் சவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.ஊத்தங்கரை அருகே, 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவி, கடந்த, 23ல் மாயமானார். மாணவியின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தனர். அதில், ஊத்தங்கரை அடுத்த பொம்ம-தாசம்பட்டியை சேர்ந்த தினேஷ், 22, என்ற வாலிபர் மீது, சந்-தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசா-ரிக்கின்றனர்.பர்கூர் அடுத்த மேல்வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் லதா, 37. இவர் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால் கடந்த, 10ல், அவரது கணவர் பழனி, எதற்காக கடன் வாங்-கினாய் என கடிந்துள்ளார். இதில், மனமுடைந்த லதா வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மாயமானார். நேற்று முன்தினம் பழனி புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Jan-2025
12-Jan-2025