மேலும் செய்திகள்
ஓசூர் அருகே ஓடும் காரில் தீ
06-Oct-2024
சர்வீஸ் சாலைக்கு எம்.பி.,யிடம் கோரிக்கை
26-Sep-2024
ஓசூர்: பெங்களூரில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாட, நேற்று முன்தினம் மாலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.அதனால், கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட்டில் இருந்து, தமிழக எல்லையான ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.இது தவிர, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், சாமல்பள்ளம், மேலுமலை, போலுப்பள்ளி தேசிய நெடுஞ்சாலைகளிலும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு சென்ற டாரஸ் லாரி, முன்னால் சென்ற கார் மீது மோதவே, அடுத்தடுத்தது கார், பிக் - அப் வாகனம், டெம்போ டிராவலர்ஸ், கன்டெய்னர் லாரி ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின.மொத்தம், ஆறு வாகனங்கள் விபத்தில் சிக்கிய நிலையில், பிக்-அப் வாகனம் கார் மீது ஏறி நின்றது. இதில் லேசான காயத்துடன் பயணியர், டிரைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதில், 3 கி.மீ.,க்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதனால், சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற மக்கள் கடும் அவதியடைந்தனர். போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். ஓசூர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Oct-2024
26-Sep-2024