உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜூலை 2ல் 7வது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி

ஜூலை 2ல் 7வது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி

தர்மபுரி, கால்நடைகளுக்கு தர்மபுரி மாவட்டத்தில், 7--வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடுவது குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், 3 லட்சத்து, 45,500 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவற்றில், 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போட, 3,62,950 டோஸ், 'கோமாரி நோய்' தடுப்பூசி மருந்து மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்திலுள்ள, அனைத்து கிராமங்களிலும், ஜூலை, 2, முதல், 22 வரை, 3 வாரம் சிறப்பு முகாம்கள் மூலம், தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. இதில், 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போடப்படும். விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை, 23 முதல், 31 வரை போடப்படும். கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை