உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மாநகராட்சி வார்டுகளில் 80 டன் கழிவுகள் அகற்றம்

ஓசூர் மாநகராட்சி வார்டுகளில் 80 டன் கழிவுகள் அகற்றம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் உள்ள, 45 வார்டு-களில் வாரந்தோறும் சனிக்கிழமை, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், துாய்மை பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஓசூர் ராயக்-கோட்டை சாலை சந்திப்பிலுள்ள அமேரியா பெட்ரோல் பங்க்கில் இருந்து, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் வழியாக, தர்கா பகுதி வரை, 3 கி.மீ., துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், துாய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் ஆகியோர் துவக்கி வைத்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர நல அலு-வலர் அஜிதா மற்றும் கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள், ஓசூர் மக்கள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்-கேற்று, துாய்மை பணியில் ஈடுபட்டனர்.தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டன. சாலையில் தேங்கியிருந்த மண், குப்பை, மேம்பாலத்திற்கு அடியில் தேங்கியிருந்த கழிவுகள் அகற்றப்பட்-டன. இப்பணியின் மூலம் மொத்தம், 20 டன் மக்கும், மக்காத குப்பைகள் மற்றும் 60 டன் மண், கல் போன்றவை அகற்றப்பட்-டன. துாய்மை பணியின்போது, சாலையோர கடைகளில், பிளாஸ்டிக்கை தவிர்க்கக் கூறி, 'மஞ்சப்பை'கள் வழங்கப்பட்-டன. மேலும், பொது இடங்களில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு வெள்ளை அடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை