மேலும் செய்திகள்
தடுப்பு இன்றி ஈஞ்சம்பாக்கம் தரைப்பாலம்
08-Sep-2024
ஊத்தங்கரை: ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கன மழை பெய்தது. இதில், சாமல்பட்டி பகுதியிலுள்ள, ரயில்வே தரை பாலத்தில், அதிகளவில் மழைநீர் தேங்கியது. அந்த வழியாக, கிருஷ்ணகிரி பகுதியில் செயல்படும் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் பஸ், ஊழியர்களை ஏற்றிக்கொண்டு நேற்று வந்தது. அப்போது, சாமல்பட்டி ரயில்வே தரை பாலத்தில் தேங்கிய மழை நீரில் பழுதாகி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த, 22 பெண் ஊழியர்கள் இறங்க முடியாமல் தவித்தனர். அருகில் இருந்தவர்கள் பொக்லைன் உதவியுடன் பஸ்சை தரை பாலத்தில் இருந்து வெளியேற்றி மீட்டனர். மழைக்காலங்களின் போது, சாமல்பட்டி ரயில்வே தரை பாலத்தில், தொடர்ந்து இதேநிலை நீடித்து வருகிறது. எனவே, தரை பாலத்தில் தேங்கும் நீரை உடனடியாக அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
08-Sep-2024