உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் உட்பட 4 பேர் மீது வழக்கு

சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் உட்பட 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே, 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடந்தது தொடர்பாக சிறுமியை மணந்த வாலிபர் உள்பட 4 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், குப்பம் தாலுகாவை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவரது தாய் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். தந்தையும் கடந்த, 6 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். சிறுமி, ஆந்திராவிலுள்ள தன் அத்தை வீட்டில் வசித்து வந்தார். சிறுமிக்கு கடந்த ஏப்., 15ல், ஜிகினிகொல்லை ஸ்ரீ வெங்கடேஸ்வர சாமி கோவிலில், பர்கூர் தாலுகா கோதி அழகனுாரை சேர்ந்த பரணி, 22 என்பவருடன் திருமணம் நடந்தது. இதற்கு உறவினர்கள் செல்லசெட்டி, சென்னம்மாள், செல்வி உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில செயல்பட்டு வரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அவர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்படி, போலீசார், பரணி, செல்லசெட்டி, சென்னம்மாள், செல்வி ஆகிய, 4 பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை