உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மலையில் இருந்து உருண்டு விழுந்தது ராட்சத பாறை

கிருஷ்ணகிரி மலையில் இருந்து உருண்டு விழுந்தது ராட்சத பாறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழையபேட்டை தம்புசாமி நகரில், கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் வெங்கடாசலம் வீடு உள்ளது. மலையிலிருந்த, 100 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள ராட்சத பாறை நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு உருண்டு விழுந்தது. இதில், வெங்கடாசலம் வீட்டின் பின்பக்க சுற்றுச்சுவர் இடிந்தது. பாறை உருண்ட பகுதி, கிருஷ்ணகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து, 300 மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் அமைய வேண்டும் என்ற விதிமுறை, அங்கு பின்பற்றப்படவில்லை. மலையிலிருந்து வடியும் மழைநீர், அப்பகுதி ஓடைக்கு சென்று, பாப்பாரப்பட்டி ஏரியில் கலக்கும். அந்த ஓடை புறம்போக்கு பகுதி பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன.கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் வெளியேற வழியில்லாததால், ராட்சத பாறை உருண்டு விழுந்துள்ளது. இந்த பாறையை உடைத்தால், அதன் மேல்பகுதியிலுள்ள பாறைகளும் உருண்டு விழும் அபாயம் உள்ளது.மேலும் வரும் நாட்களில், கிருஷ்ணகிரியில் மழை பொழியும் பட்சத்தில், இப்பகுதியில் பாறைகள் உருண்டு பெரிய விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பாறை உருண்ட பகுதியை அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்காட்சியை பார்ப்பது போல், பார்த்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rathinam Karthikeyan
டிச 05, 2024 19:06

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். வனத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.


Subash BV
டிச 05, 2024 18:43

Suitcases politics. How he built house there. INVESTIGATE PROPERLY. BE ALERT.


அப்பாவி
டிச 05, 2024 11:11

தோண்டி எடுக்குற செலவு மிச்சம். சீக்கிரம் எம்.சாண்ட் ஆளுங்க வந்து அள்ளிக்கிட்டுப் போயிருவாங்க. கவலை வாணாம். பீதி வாணாம்.


sankar
டிச 05, 2024 11:02

அவர் மலையின் மீது கோபம் கொண்டு அதை மைதானம் ஆக்கிவிட போகிறார்


R SRINIVASAN
டிச 05, 2024 10:59

திருவண்ணாமலையிலும் இதே கதைதான் .பக்தர்கள் கிரிவலம் போகும் பாதையில் உள்ள நடைபாதை கடைகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதற்கு அதிகாரிக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. பார்த்தார் சிவபெருமான் தண்டனையைக் கொடுத்து விட்டார்.


Yes your honor
டிச 05, 2024 10:57

அப்படியல்ல, மலையைத் தூர்வார வேண்டும் என்று 4000 கோடி கேட்டு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவார்கள் என்பது தான் சரியாக இருக்கும். அப்புறம், அனைவருக்கும் கொசு வழங்கியதை போன்று அங்கிருக்கும் பொதுமக்களுக்கு பூச்சிகளை வழங்கும் திட்டத்தை அறிவிப்பார்கள்.


Madras Madra
டிச 05, 2024 10:21

ஆக்ரமிப்பு அறிவீனம் அறிவீனம் அழிவின் பாதை


VENKATASUBRAMANIAN
டிச 05, 2024 07:36

காசு வாங்கி கொண்டு உரிமம் கொடுத்ததின் விளைவு.இதுதான் திராவிட கட்சிகளின் ஆட்சியின் லட்சணம்


sakthivel
டிச 05, 2024 08:22

YES 100%


பிரகாஷ்
டிச 05, 2024 07:29

தமிழக அரசு மலைகளை தூர்வாரத் தவறி விட்டதே காரணம்னு இ.பி.எஸ், அண்ணாமலை பாய்ச்சல், செய்தி வரலாம்.


Raj
டிச 05, 2024 06:18

மலையையும், விவசாய மற்றும் வன விலங்குங்கள் வாழும் நிலங்களை ஆக்கிரமித்தால் இது போல கோர விபத்துக்கள் நடக்க தான் செய்யும். மனிதன் வாழும் இடத்தை தேர்ந்தெடுத்து வாழுங்கள்.


புதிய வீடியோ