மேலும் செய்திகள்
வக்கீல் சங்கம் சார்பில் பண்பு பயிற்சி முகாம்
09-Oct-2025
ஓசூர், அகில பாரத சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், நீர்நிலைகளை பாதுகாத்து, குப்பை கொட்டாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் நேற்று மாலை, 6:00 மணிக்கு கங்கா ஆரத்தி நடந்தது. அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானாந்தா தலைமையில், ராமநாயக்கன் ஏரிக்கு சிறப்பு பூஜை செய்து, கங்கா ஆரத்தி காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் சுதா நாகராஜன், நீர்நிலை பாதுகாப்பு இயக்க துணைத்தலைவர் ஒய்.வி.எஸ்., ரெட்டி, விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக, மாநில இணை செயலாளர் விஷ்ணுகுமார், பஜ்ரங்தள் வட தமிழக, மாநில அமைப்பாளர் கிரண் மற்றும் போத்திராஜ், கிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, ஓசூர் எம்.ஜி., ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் அருகே இருந்து, ராமநாயக்கன் ஏரிக்கு, காவிரி ரதம் ஊர்வலமாக சென்றது.
09-Oct-2025