யானை நடமாட்டம் உள்ள கிராமத்தில் பெண்ணிற்கு பிரசவம் நள்ளிரவில் சென்று சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர்
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, யானை நடமாட்டம் உள்ள மலை கிராமத்தில் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், நள்ளிரவு நேரத்தில் கிராமத்திற்கு சென்ற மருத்துவ குழுவினர், பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே தேவன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மனைவி ஆனந்தி, 23. இவர்களுக்கு கடந்த, 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான ஆனந்தி, தன் தாய் வீடான தொளுவபெட்டா பழையூர் கிராமத்-திற்கு பிரசவத்திற்காக சென்றார். வனப்பகுதிக்குள் இந்த கிராமத்-திற்கு, 10 கி.மீ., துாரத்திற்கு மேல் தார்ச்சாலை வசதி மற்றும் பஸ் வசதி கூட கிடையாது. யானைகள் நடமாட்டம் உள்ள வனப்-பகுதிக்கு நடுவே உள்ள வழிப்பாதையில் தான் செல்ல முடியும். கார், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வது சிரமம்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 11:27 மணிக்கு ஆனந்-திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில் யானைகள் நட-மாட்டம் இருக்கும் என்பதால், ஆனந்தியை அரசு மருத்துவம-னைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் தயங்கினர். தகவல-றிந்த கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தார். 40 கி.மீ., துாரத்தில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வர வேண்டும்.அதுவரை காத்திருந்தால் தாய், சேய் உயிருக்கு ஆபத்து ஏற்-படும் என்பதால், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தன் காரில் கிராம செவிலியர் சத்யா, சுகாதார ஆய்வாளர் சந்தோஷ், நவீன்குமார் ஆகியோரை அழைத்து கெண்டு, நள்ளி-ரவு, 12:10 மணிக்கு ஆனந்தி வீட்டிற்கு மருத்துவ உபகரணங்க-ளுடன் சென்று பிரசவம் பார்த்தார்.நள்ளிரவு, 12:25 மணிக்கு சுக பிரசவத்தில், 2.770 கிலோ எடையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. நஞ்சு கொடியை அகற்றிய மருத்துவர் ராஜேஷ்குமார், ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால் தனது காரில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தாய், சேயை அழைத்து சென்றார். ஒன்றரை கி.மீ., துாரம் வனப்பகுதிக்கு நடுவே சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதில் பாதுகாப்பாக தாய், சேய் இருவரும் ஏற்றப்பட்டு உனிசெட்டி அனுப்பப்பட்-டனர். அங்கிருந்து நேற்று காலை, 6:30 மணிக்கு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ குழு-வினரை மலை கிராம மக்கள் பாராட்டினர்.