உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா கொண்டாட்டம்

அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா கொண்டாட்டம்

அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா கொண்டாட்டம்ஓசூர், அக். 18-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அ.தி.மு.க., 53வது ஆண்டுவிழாவை அக்கட்சியினர் கொண்டாடினர்.ஓசூர், ராயக்கோட்டை சாலையிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு தொகுதி செயலாளர் ராஜூ தலைமையில் கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதுபோல, சீதாராம்மேடு, மத்திகிரி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சி நடந்தது.இதில், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன் எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஜெயபிரகாஷ், ஓசூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன் மற்றும் அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் படங்களுக்கு கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில், எம்.ஜி.ஆரின் நினைவாக கட்டப்பட்ட சமாதியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி ஆகியோர் தலைமையில், எம்.எல்.ஏ., அசோக்குமார் மற்றும் கட்சியினர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகிலும் கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை