அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் மற்றும் நகர, அ.தி.மு.க., சார்பில், பி.எல்.ஓ., 2 மற்றும் பாக முக-வர்கள் ஆலோசனை கூட்டம் காவேரிப்பட்டணத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் சுந்தர் வரவேற்றார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சதீஷ்குமார், வரும், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், வாக்காளர்களின் பெயர் நீக்கம், சேர்த்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா கேசவன், மாவட்ட மாணவரணி மோகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.