மேலும் செய்திகள்
அரசு மகளிர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்
07-Jun-2025
கிருஷ்ணகிரி, பள்ளியிலுள்ள மன்றங்களில் பங்கேற்று, ஆளுமை பண்புகளை வெளிப்படுத்த மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டது.கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவியரின் கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளியில் செயல்பட்டு வரும் இலக்கியம், கவின் கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் அனைத்தும் நேற்று துவங்கப்பட்டன. சி.இ.ஓ., (பொ) முனிராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்து பேசினார். அப்போது, அனைத்து மாணவியரும் குறைந்தது ஒரு மன்றத்திலாவது பங்கேற்று தங்களது ஆளுமை பண்புகளை வெளிப்படுத்தும் விதமாக செயலாற்ற அறிவுறுத்தினார். மேலும், சர்வதேச பிளாாஸ்டிக் பை இல்லாத தினத்தை முன்னிட்டு, மாணவியருக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எங்கு சென்றாலும் துணிப்பையை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறி, மாணவியருக்கு 'மஞ்சப்பை' களை வழங்கினார். முன்னதாக, தலைமை ஆசிரியர் நளினி வரவேற்றார். மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தார். விழா ஏற்பாடுகளை பள்ளி துணை ஆய்வாளர் சுதாகர் செய்திருந்தார்.விழாவில், மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் ஆசியர்கள் பங்கேற்றனர். மன்ற செயல்பாடு குறித்து, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.
07-Jun-2025