அ.தி.மு.க., பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை நகர செயலர் பழனிசாமி தலைமை வகித்தார்.கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் பாலகிருஷ்ணா ரெட்டி, மாநில அம்மா பேரவை இணை செயலர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று, சட்டசபை தேர்தலில் பணியாற்றுவது குறித்து எடுத்துரைத்தனர்.சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலர் சதீஷ், சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலர் பிரசன்னா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.