அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கி பேசினார். சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் நிர்மல் குமார், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.