மேலும் செய்திகள்
பி.டி.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்
26-Jun-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், அ.தி.மு.க., சார்பில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனி வெங்கட்டப்பன், மனோரஞ்சிதம், கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பல்வேறு ஆலோசனை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், சாமிநாதன், மத்துார் ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, நரேஷ்குமார், ஊத்தங்கரை நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
26-Jun-2025