உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயி குடும்பத்திற்கு அ.தி.மு.க., நிதியுதவி

விவசாயி குடும்பத்திற்கு அ.தி.மு.க., நிதியுதவி

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனே-கொள்ளு பஞ்.,க்கு உட்பட்ட குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, 45, விவசாயி; இவரது, மாட்டு கொட்டகையில் சமீ-பத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து, இரு மாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. இதையறிந்த வேப்பனஹள்ளி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முனுசாமி, விவசாயி முனியப்பா குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.கெலமங்கலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் ஜெயபால், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலர் ராமமூர்த்தி, ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் பழனிசாமி உட்-பட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ