அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வினியோகம்
ஓசூர், :ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலையில், அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் நான்கரை ஆண்டு சாதனை குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் விழா நடந்தது. ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ராஜூ முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் ஆகியோர், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், கவுன்சிலர்கள் லட்சுமி ஹேமகுமார், தில்ஷாத் முஜிபூர் ரகுமான், குபேரன், முன்னாள் கவுன்சிலர் அரப்ஜான் உட்பட பலர் பங்கேற்றனர்.