உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., அரசை கண்டித்து கி.கிரியில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து கி.கிரியில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, டிச. 27-கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் நடந்து வருகின்றன.இதை கட்டுப்படுத்த தவறிய, சட்டம், ஒழுங்கை பாதுகாக்க தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை எதிரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார்.அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.இதில் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ