மேலும் செய்திகள்
புதிய வன கோட்டங்கள் உருவாக்கம்
06-Feb-2025
த.வெ.க.,வில் 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்
24-Jan-2025
அடுத்து வர உள்ள சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அதற்கான பணிகளை, தற்-போதே தொடங்கி உள்ளன. அதில், அ.தி.மு.க., முதல் கட்ட-மாக, கட்சியில் காலியாக உள்ள இடங்களில், புது நிர்வாகிகளை நியமித்துள்ளது. தொடர்ந்து எதிர்க்கட்சியின் திட்டங்களில் உள்ள குறைபாடுகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசும்படி, திறமையான பேச்சாளர்களை தேர்வு செய்ய, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. தற்போது, மாணவர் அணி சார்பில், ஒவ்வொரு மாவட்டங்-களில் மாநகர், கிழக்கு, மேற்கு என, 82 மாவட்டங்களில் பேச்-சாளர்களை தேர்வு செய்ய, ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான போட்டிகள் ஒவ்வொரு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. விரும்பும் திறமையான ஆண், பெண் பேச்சாளர்கள், கண்டிப்-பாக, அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினராக, 18 முதல், 35க்குள் இருக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி விழாவில் பேசிய அனு-பவம் அவசியம். தேர்வு செய்யப்படும், 82 பேச்சாளர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்தில், 5 நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். அதற்கு பின், மாநிலம் முழுதும், அ.தி.மு.க., சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள், தேர்தல் நேரத்தில் நடக்கும் கூட்டங்களில் பேச வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க., மாணவர் அணி நிர்வா-கிகள் மேற்கொண்டுள்ளனர்.- நமது நிருபர் -
06-Feb-2025
24-Jan-2025