தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மகிழ் முற்றம்
தேன்கனிக்கோட்டை அருகேஅரசு பள்ளியில் மகிழ் முற்றம்ஓசூர், நவ. 21-தேன்கனிக்கோட்டை அருகே, கக்கதாசம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மகிழ் முற்றம் துவக்க விழா நடந்தது. தலைமையாசிரியை அன்னபூர்ணா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு, 5 வகை வண்ணங்களில் கொடி, சீருடை வழங்கப்பட்டன.மகிழ் முற்றத்தின் பொறுப்பாசிரியராக ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த நல்லாசிரியர் விருது பெற்ற பட்டதாரி ஆசிரியை ஸ்வர்ணா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தன் சொந்த செலவில், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், 5 வகை வண்ணங்களில் குழுக்களுக்கான சீருடைகளை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி மீனாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.