அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அடையாள வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாநில துணைத்தலைவர் கோவிந்-தம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தேவி, செய-லாளர் சுஜாதா முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்-களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக, 10 லட்சம் ரூபாய், உத-வியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய், குடும்ப ஓய்வூதியமாக, 9,000 ரூபாய், மே மாத விடுமுறை ஒரு மாதமாக வழங்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பையும், முன்பருவ கல்வியின் முக்கியத்-துவத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக காலி பணியிடங்-களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட, 600க்கும் மேற்-பட்டோரை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்து, பின்னர் விடு-வித்தனர்.* தர்மபுரியில் கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார்.இதில், சாலை மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழி-யர்கள், 808 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தினர்.