ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ஓசூர்: ஓசூர் மத்தம் அக்ரஹாரத்தில், 500 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் கோவில், டி.வி.எஸ்., நிறுவன நிதியுதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு, கடந்த, 6ல் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு யாக சாலையில் இருந்து கும்ப புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, கோவில் விமான கலசங்கள் மற்றும் ஆஞ்சநேய சுவாமி, விநாயகர், நவக்கிரகங்கள், மூல மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. டி.வி.எஸ்., நிறுவன இயக்குனர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் செல்வம், மாநகராட்சி மண்டல தலைவர் காந்திமதி கண்ணன், கவுன்சிலர் பாக்கியலட்சுமி உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, சந்திரன், மஞ்சுநாத், கிரிஷ், ரமேஷ், ஹரிஸ், சுரேஷ், பாப்பண்ணா, வசந்த், நஞ்சாரெட்டி, நரசிம்மன் உட்பட ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.