உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் பொறுப்பேற்புக்கு முன் வேறொருவர் நியமனம்

ஓசூர் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் பொறுப்பேற்புக்கு முன் வேறொருவர் நியமனம்

ஓசூர், ஓசூர் மாநகராட்சிக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்கும் முன்பே அந்த உத்தரவு ரத்தாகி, புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஓசூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீகாந்த், கடந்த ஜன., மாதம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். ஓசூர் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பை, சேலம் மாநகராட்சி துணை கமிஷனராக இருந்த பூங்கொடி அருமைக்கண் கவனித்து வந்தார். அவரும் மாற்றப்பட்டு, ஆவடி மாநகராட்சி துணை கமிஷனர் மாரிச்செல்வி தற்போது பொறுப்பு கமிஷனராக உள்ளார். இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் நிஷாந்த் கிருஷ்ணாவை, ஓசூர் மாநகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்து கடந்த, 23ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி அடுத்த, 48 மணி நேரத்திற்குள், நிஷாந்த் கிருஷ்ணா மாற்றப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி) கூடுதல் கலெக்டர் ஷபீர் ஆலம், ஓசூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்படுவதாகவும், தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஓசூர் மாநகராட்சியில் கடந்த, 5 மாதமாக வரி வருவாய், புதிய வரி விதிப்பு மற்றும் நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு புதிய கமிஷனர் பொறுப்பேற்கும் முன்பே அவரை மாற்றி விட்டு, வேறொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை கமிஷனராக நியமித்துள்ளது. இதற்கு அரசியல் அழுத்தம் காரணமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை