ஊழல் ஒழிப்பு குழு விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஊழல் ஒழிப்பு குழு சார்பில், நேற்று விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேசிய தலைவர் ரபிந்தரா திவேதி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி, ராயக்கோட்டை சாலை வழியாக சென்று விநாயகா ஹால் அருகே நிறைவடைந்தது. அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் சையத் ஷா ரைசுத்தீன் உள்பட பலர் பங்கேற்றனர்.