உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதை பொருள் ஒழிப்பு பேரணி

போதை பொருள் ஒழிப்பு பேரணி

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், போதை பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவியர் ஏந்தி சென்றனர். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி இராமபுரம், குந்தாரப்பள்ளி கூட்ரோடு சாலை வழியாக, மீண்டும் பள்ளியிலேயே நிறைவடைந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை