மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலராக விண்ணப்பம்
01-Jul-2025
ஓசூர், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவிக்கு, 40 சதவீதத்திற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, 3:00 மணிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஓசூர் மாநகராட்சி மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு, தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். அதை, உதவி கமிஷனர் டிட்டோ பெற்றுக்கொண்டார்.
01-Jul-2025