மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஓசூர், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2024 - 25ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி மேலாண்மை குழு சார்பில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் மோகன் ஸ்ரீதரன், பள்ளியளவில், 2ம் இடம் பெற்ற கிஷோர், மூன்றாமிடம் பெற்ற முகமது சாத் ஆகிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, மாநகர மேயர் சத்யா பாராட்டி, சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.மேலும், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி மேலாண்மை குழு சார்பில், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் சியாமளா, சரவணன், பெருமாள், பிரபாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.