உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால், கடந்த, 11 மற்றும், 12 ஆகிய இரு நாட்கள், மாவட்ட அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள், கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒலிம்பிக் பேக்டரியில் நடந்தது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபாலன், மாவட்ட விளையாட்டு அரங்க, தேக்வாண்டோ பயிற்சியாளர் சங்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ