மேலும் செய்திகள்
கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு
16-Sep-2024
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த சாப்பமுட்லுவை சேர்ந்த சகோதரர்கள் பார்த்திபன், இளையராஜா. ஜிட்டோபனப்பள்ளியில் தாபா ஓட்டல் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம் வந்த மூவர், தகராறில் ஈடுபட்டு, அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். 'சிசிடிவி' காட்சிகளின் படி, தகராறில் ஈடுபட்டவர்கள் ஜெகதேவி எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த கிரிதரன், 25, அன்பு, 26, மற்றும் கிட்டம்பட்டி விக்கி, 20, என தெரிந்தது. அவர்களிடம் பார்த்-திபன், 'ஏன் தாபா ஓட்டலில் ரகளை செய்தீர்கள்' என கேட்-டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், அவர் மற்றும் இளையராஜா ஆகியோரை, மூவரும் சேர்ந்து தாக்கினர். படுகாயமடைந்த பார்த்-திபன் மற்றும் இளையராஜா கிருஷ்ணகிரி அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்றனர். அவர்கள் புகார் படி, பர்கூர் போலீசார் தாபாவில் தகராறு செய்த மூவரையும் தேடி வருகின்-றனர்.
16-Sep-2024