உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டில் திருட முயன்றவர் கைது

வீட்டில் திருட முயன்றவர் கைது

வீட்டில் திருட முயன்றவர் கைதுஓசூர்:தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் அருகே காளிகட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 45. விவசாயி; கடந்த மாதம், 4 காலை வீட்டை பூட்டி விட்டு, மனைவி ரோஜாவதியுடன் அருகில் இருந்த தோட்டத்திற்கு சென்று விட்டார். மாலையில் திரும்பியபோது, அவரது வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் ஓடுவதை பார்த்தார். அதிர்ச்சியடைந்த மூர்த்தி வீட்டிற்கு சென்று பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், வீட்டில் இருந்த பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை. மூர்த்தி புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்தனர். இதில், பெட்டமுகிலாளத்தை சேர்ந்த மல்லேஷ், 25, என்பவர், மூர்த்தி வீட்டில் திருட முயன்றது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை