அர்த்தநாரீஸ்வரம்மா கோவில் விழா
ஓசூர், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி சிவசக்தி நகரிலுள்ள அர்த்தநாரீஸ்வரம்மா கோவில், 25ம் ஆண்டு விழா இரு நாட்கள் நடக்கிறது. சிறப்பு ஹோமங்கள், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.