குடித்த டீக்கு பணம் கேட்டதால் தாக்குதல்; 6 பேருக்கு காப்பு
குடித்த 'டீ'க்கு பணம் கேட்டதால்தாக்குதல்; 6 பேருக்கு 'காப்பு'ஓசூர், அக். 18-ஓசூர் அடுத்த ஒன்னல்வாடியை சேர்ந்தவர் நாராயணசாமி, 53. அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அவரது கடையை ஒட்டி ஆனந்த் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு, ஓசூர் அடுத்த சென்னத்துாரை சேர்ந்த ஹரிஷ்குமார், 32 என்பவர், சிலருடன் வந்து, டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளை வாங்கினார். ஆனால் அதற்கு சரியான தொகையை வழங்கவில்லை. இதை, டீக்கடை ஊழியர் அஞ்சப்பா கேட்டுள்ளார். 'எங்களிடமே பணம் கேட்டு மிரட்டுகிறீர்களா' எனக்கூறி அஞ்சப்பா, ஆனந்த் இருவரையும், ஹரிஷ்குமார் தரப்பினர் தாக்கினர். இதை தட்டிக்கேட்ட மளிகை கடைக்காரர் நாரயணசாமியை, அருகிலிருந்த சிறிய சிலிண்டரால் தாக்கியதில் படுகாயமடைந்த நாராயணசாமி, ஓசூர் ஜி.ஹெச்.,ல் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், ஹரிஷ்குமார், சந்தோஷ், 28, தருண், 22, மற்றும், 18 வயதுடைய மூவர் உட்பட, 6 பேரை கைது செய்தனர்.