உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவிரியாற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

காவிரியாற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

ஒகேனக்கல், சென்னை, ஆர்.கே.நகர், தண்டாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் பிரபு,38. இவர், ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று தனது நண்பர்கள், பத்து பேருடன் காரில் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தார். ஒகேனக்கலில், பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். நண்பகல், 1:00 மணியளவில் நண்பர்களுடன் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பிரபு ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனடியாக நண்பர்கள் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பரிசல் ஓட்டிகள் உதவியோடு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பிரபுவை சடலமாக அதே இடத்தில் மீட்டனர். ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த பிரபுவிற்கு கல்பனா என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி